2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கல்லடி கடற்கரையை மாற்றியமைக்க தீர்மானம்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மட்டக்களப்பு, கல்லடிக் கடற்கரைப் பகுதியை சுற்றுலாத்துறைக்கு ஏற்றமாதிரி மாற்றியமைக்க தீர்மானித்துள்ளோம்' என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரைப் பகுதியை அழகுபடுத்துவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை (10) மாலை நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அராசங்க அதிபர்,

சுற்றுலாத்துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 49.5 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரைப்பகுதி அழகுபடுத்தப்படவுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்களுடைய உள்ளூர் உற்பத்திகளைத் தயாரித்து விற்பனை செய்யக் கூடியளவுக்கு இரண்டு உணவு விடுதிகள் இந்த திட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அதேபோல கடற்கரையோடு வாழுகின்ற சமூகத்தினர், தங்களுடைய வாழ்வதாரத்தினை மேம்படுத்துவற்காக உள்ளூர் உற்பத்திகளை உற்பத்தி செய்தவதற்கும் வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்குமாக பத்துக்கடைகள் இங்கு நிர்மாணிக்கப்படவுள்ளன.

மலசல கூட வசதிகளுடன் கூடிய இரண்டு கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இந்த இடத்தில் 100 கதிரைகள் போடப்படும். அத்துடன் குழந்தைகள், சிறுவர்களுக்கான விளையாடும் இடம் நிர்மாணிக்கடவுள்ளது. நிழல் தரக் கூடிய மரங்களும் இந்த திட்டத்தின் கீழ் நடப்படவுள்ளன. இது முதல் கட்ட வேலையாகும்.

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதும் கடற்கரையை அன்மித்து வாழுகின்ற சமூகம் தங்களது வாழ்வாதார தொழில்களை மேற்கொண்டு தங்களது வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவுமே இந்த கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கமாகும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X