Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டமானது கல்வி அறிவில் 67 சதவீதமாகக் காணப்படுகின்றது. இது கல்வி அறிவில் குறைந்த மாவட்டம் ஆகும் என அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
கல்வி அறிவு என்பதும் கல்வியைத் தொடர முடியாது என்ற நிலைமையும் இந்த மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினை ஆகும். இந்த நிலைமையை மாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலக ஊழியர் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலக வாணி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வெறுமனே சான்றிதழ்களுக்கான கற்கையாக இலங்கையின் கல்வி அமைந்துள்ளதாக அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும்போதே, உலக மயமாக்கலில் உள்வாங்கப்படுவோம் என்ற கருத்து வேகமாகப் பரவி வருகிறது.
க.பொ.த. சாதாரணதரம், உயர்தரம், பல்கலைக்கழகக் கல்வியாக இருந்தாலும், சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் உத்தியோகம் செய்ய வேண்டும். என்ற நோக்கத்துடன் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்றார்.
'கல்வி என்பது மனிதனை முழுமை அடையச் செய்வதற்கான ஒன்றாகும் என்பதுடன், சமூக மாற்றத்துக்கும் முக்கியமானது ஆகும்' எனவும் அவர் கூறினார்.


2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago