Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
கல்வி தொடர்பான முயற்சிகளில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அக்கறையீனம் காரணமாக கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு 1,134 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதற்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, 1,500 விண்ணப்பங்கள் கிடைத்தன. இவர்களுக்கு நடத்;தப்பட்ட எழுத்துப் பரீட்சையில் 390 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர். இது எமக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா, இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 103 பாடசாலைகளில் கரடியனாறு மகா வித்தியாலமும் ஒன்று.
கடந்தகால அசாதாரண சூழல் எமது பிரதேசங்களில் கல்வியை மிகவும் பாதித்தது. யுத்தத்தினுடைய தாக்கத்தின் இடைவெளி கிழக்கு மாகாணத்திலும் காணப்படுகிறது. மாகாணத்தில் ஏனைய சகோதர சமூகங்களுடன் ஒப்பிடும்போது, சில வருடங்கள் பின்தங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாங்கள் குறைத்து ஏனையவர்களுக்கு சமமாக முன்னேறவேண்டிய தேவையுள்ளது' என்றார்.
'கல்குடா, மூதூர் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகக் காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றபோதிலும், அவை நூறு வீதம் வெற்றியளிப்பதில்லை.
கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களை ஆசிரியர் பற்றாக்குறை அதிகம் நிலவுகின்ற பாடசாலைகளில் முன்னுரிமைப்படுத்தி நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்விக் கல்லூரிகளிலிருந்து வெளியேறும்; தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலை வழங்குவதிலும் ஒரு பிரச்சினை காணப்படுகிறது' எனவும் அவர் மேலும் கூறினார்.


1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago