Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடித்தருமாறு அரசாங்கத்தையும் சர்வதேசத்தையும் வலியுறுத்துவதாக அம்மாவட்ட தாயக மக்கள் மறுமலர்ச்சிக்கழகத்; தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,200க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது தாம் மேற்கொண்ட பதிவின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்களின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்;ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வாகும்' என்று வலியுறுத்தப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதியில் இது தொடர்பான மகஜர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.அஸீஸிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகத் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் மேலும் தெரிவிக்கையில், 'காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறப்படுமாயின், ஏற்கெனவே வழங்கப்பட்ட மரணச்சான்றிதழ்களை மீளப் பெறவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்டம் மற்றும் அதன் அலுவலகம்; ஊடாக ஒரு உறுதிமொழியை வழங்கவேண்டும். அது காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற உறுதிமொழியை வழங்கி அதற்கான கடிதங்களை வழங்கவேண்டும்.
1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 756 பேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்;. அவர்களில் 677 பேர் தமிழர்கள் ஆவர்.
இதன் பின்னர் 1996ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரைக்கும் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியை நிலை நாட்டும் அமைப்பின் ஊடாக விசாரணை நடத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயராகவுள்ளோம் என்பதுடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக உரிய சான்றிதழ்களை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேம்' எனவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago