Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
இனப்பிரச்சினைக்கு நிரந்தத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்று நம்பியே ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில், கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிடின், தமிழ் மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெலிக்காக்கண்டி கிராம அபிவிருத்தி தொடர்பான கூட்டம், அங்குள்ள முருகன் கோவில் முன்றலில் செவ்வாய்க்கிழமை (03) மாலை நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ்த்; தலைமைகளை ஏமாற்றுவது வரலாறாகக் காணப்படுகிறது. அந்த வகையில், நல்லாட்சிக்கான அரசாங்கமும் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நழுவல் போக்கையே கடைப்பிடிக்கிறது' என்றார்.
'வெலிக்காக்கண்டி கிராம மக்கள் 1990 ஆண்டிலிருந்து இடம்பெயர்வுகளை சந்தித்திருந்ததை நான் அறிவேன். எமது எல்லைப்புற கிராம மக்கள் தமது இருப்புக்களைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கவேண்டும். நீங்கள் இந்த இடங்களிலிருந்து வெளியேறும்போது, வேறு இனத்தை குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
இப்பிரதேசத்துக்கான அபிவிருத்தி தொடர்பில் நாங்கள் கூடிய கவனம் செலுத்தவுள்ளோம். இடம்பெயர்ந்து வெளியிடங்களில் வாழ்கின்ற மக்கள் மீள்குடியேறும் பட்சத்தில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago
1 hours ago