Suganthini Ratnam / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கித்துள் -உறுகாமம் குளங்களை இணைக்கும் திட்டத்தின் பூர்வாங்க ஆய்வு பூர்த்தியடைந்துள்ள நிலையில், 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இதற்கான வேலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
முந்தனை ஆறு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 24140.6 மில்லியன் ரூபாய் செலவில் கித்துள் -உறுகாமம் குளங்களை இணைக்கும் திட்டம் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டு முகவராண்மை அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
தற்போது இதற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீடு தயாரிப்பதற்கான வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக பொருளாதார ஆய்வை மத்திய நீர்ப்பாசனத்திணைக்களமும் ஏறாவூர்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளன. சாத்தியவள அறிக்கைக்குரிய ஆய்வை பிரான்ஸ் நிதியீட்டு முகவர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின்; மூலம் மாவட்டத்துக்கு கிடைக்கும் நீரின் 80 சதவீதம் வீணாகக் கடலுக்குச் செல்வது தவிர்க்கப்படும் என்பதுடன், அங்கு ஏற்படும் வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும். உறுகாமம் -கித்துள் குளங்களை இணைப்பதன் மூலம் உருவாகும் பாரிய நீர்பாசனத்திட்டத்தின் மூலம் அதிக நீர் சேமிக்கப்படும். இதன் காரணமாக சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு உள்ளிட்ட கிராமங்களில்; வெள்ளப் பாதிப்பைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வரட்சியான காலத்தில் நீர்விநியோகத்தை மேற்கொள்ள முடியும்.
மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாக கித்துள் -உறுகாமம் குளம் அமையவுள்ளது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago