Gopikrishna Kanagalingam / 2015 நவம்பர் 12 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
உலகில் அதிகமான கிருமி நாசினிகளைப் பாவிப்பதில் இலங்கை முதன்மை வகிக்கின்றது அதிலும் கூடுதலான கிருமி நாசினி மற்றும் அசேதனப் பசளைகளை பாவிக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது. இதனால், இலகுவில் நோய்வாய்பபடுவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
“அபிவிருத்திக்கான ஒன்றிணைவு” எனும் தொனிப்பொருளில் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய உதவித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான செயலமர்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இரசாயனப் பாவனையைக் குறைப்பதனால் பக்க விளைவுகளைக் குறைக்கலாம். நீரின் தரம் மற்றும் பாதுகாப்பு என்பன கண்டறியப்பட வேண்டிய நிலையில் கடந்த வருடம் 3,000 மேற்பட்ட குழாய் நீர் இணைப்புக்கள் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதிநவீன எல். இ. டி. மின் குமிழ்களைப் பாவிப்பதனால் மனிதனுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனை தவிர அத்தனை உயிரினங்களும் சூரிய ஒளியின் செயற்பாட்டில் இசைந்து போகின்றன. மனிதன் ஆராய்ச்சியின் பயனாக இரவில் நவீன எல்.இ.டி. மின்குமிழ்களைப் பாவித்து செயல்களில் ஈடுபடுவதனால் சில சுரப்பிகள் செயலற்றுப் போவதனால் இறுதியில் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது என்றார்.
இதில்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்சளியன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் யு. ரட்ணபால, உதவிப் பொது முகாமையாளர் என். சுதேசன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு அலுவலக பொறியியலாளர் கே. வினோதன், யுனிசெப்பின் பிரதிநிதி ரெபன்சியா பீட்டர்சன், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
11 minute ago
19 minute ago
22 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
22 minute ago
24 minute ago