2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம் இரத்து

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த நிலையில், அக்கூட்டம்; இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்கான  பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்;டம் இன்றையதினம் காலை 09 மணிக்கு நடைபெறும் என்று அப்பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டது. இதற்கமைய, ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் தானும் உரிய நேரத்துக்கு கூட்டத்துக்கு சென்றபோதும், திணைக்களங்களின் தலைவர்களில் அதிகளவானோர் அக்கூட்டத்துக்கு  உரிய நேரத்துக்கு வருகை தராமையால் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

கடந்த மாதம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்துக்கும் அரசாங்க அதிகாரிகளின் வருகை குறைந்து காணப்பட்டதாகவும் இந்நிலையில்,  கூட்டத்துக்கு  வருகை தராத உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக அவர்களது திணைக்களத் தலைவர்களிடம் விளக்கம் கேட்டு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இக்கூட்டத்துக்கு திணைக்களத் தலைவர்கள் வருகை தராமை கவலைக்குரிய விடயம் ஆகும். எனவே, இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X