Gavitha / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்
'2015- 2016ஆம் ஆண்டுகளில், 4,485 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகள் 1,070 பேரும் மாற்றுத் திறனாளிகள் 73 பேரும், காணாமல் போனோர் 45 பேரும், முன்னாள் போராளிகள் 294 பேரும், உள்ளடக்கப்பட்டுள்ளனர்' என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (08), அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற, இந்த வருடத்துக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
'மீள்குடியேற்ற அமைச்சினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விசேட தேவையுடையோர், காணாமல் போனவர்களது குடும்பங்கள், புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோர்க்கு 820 மில்லியன் ரூபாய் செலவில், 1025 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், 2,880 வீடுகள் முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள், இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் அடங்கலாக, 1,584 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.
'மீள்குடியேற்ற அமைச்சினால், யுத்தத்தினால்; பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளின் 48 உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்காக, 177.87 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன' என்றும் அவர் கூறினார்.
'இதேவேளை 236 குடிநீர் விநியோகத்தட்டங்களுக்காக 103 மில்லியனும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் 760 திருத்துவதற்காக 145.20 மில்லியன்; ரூபாய், 1,000 மலசலகூடவசதிகளுக்காக 55 மில்லியன் ரூபாய், அத்துடன் 1,033 வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பெரும்பாலான வேலை நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய வேலைகளை உடனடியாக நவம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யுமாறு அரசாங்க அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago