Suganthini Ratnam / 2017 ஜனவரி 23 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஸ்.எம்.நூர்தீன்
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் பின்னணியில் சதி நடவடிக்கை உள்ளதா எனச் சந்தேகிக்கத் தோன்றுகின்றது என மட்டக்களப்பு பிரஜைகள் அபிவிருத்தி மையத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிரஜைகள் அபிவிருத்தி மையத்தின் கூட்டம், றிவேரா விடுதியில் இன்று (23) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்தபோது, 'கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்;போதைய நிலைமை தொடர்பில் கவலையாக உள்ளது.
பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சில விரும்பத்தகாத சம்பவங்கள், மாணவர்களின்; கல்வியைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
இப்பல்கலைக்கழகத்தின்; இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் தங்களுக்கு விடுதி வசதி வேண்டும் எனக் கோரி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாணவர்களின் பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு பின்னால் ஏதோவொரு சக்தி செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மாணவர்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பதற்காக கல்வி நடவடிக்கையை முடக்கச் செய்வதானது கல்விசார் சமூகத்தையும்; மாணவர்களின் கற்கையில் பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமானது இதற்கான தீர்வை வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு பிரஜைகள் அபிவிருத்தி மையம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இந்த மாணவர்;களின் விடுதி வசதிக் கோரிக்கை தொடர்பில் இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு அனைத்து மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்கி, கற்கையை முடக்காமல் செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்'; என்றார்.
8 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
45 minute ago