Suganthini Ratnam / 2016 மே 02 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் கல்விசார் குறைபாடுகள் பல காணப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
த.தே.கூ.வின் மே தினக் கூட்டம், மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஆசிரியர் இடமாற்றங்கள்; இடம்பெற்றுள்ளன. கல்குடாக் கல்வி வலயத்;தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். 285 ஆசிரியர்களுடன் இருந்த கல்குடாக் கல்வி வலயத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாற்றப்பட்டதால், அவ்வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.
'மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆகவே, எமது ஆசிரியர் வளத்தை அதிகரிக்க வேண்டும். இந்த மே தினக் கூட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்' என்றார்.
'மேலும், 53 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை இடமாற்றுவதாயின், அந்த ஆசிரியர்களின்; அனுமதி பெறப்பட வேண்டும். அவர்களின்; விருப்பத்தின் பேரிலேயே இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறான நிலைமை இங்கு இல்லை. இவையெல்லாம் உரிமை மீறல்கள். தொழிலாளர் வர்க்கத்தை பாதிக்கும் நடவடிக்கையாகும். இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். கல்விசார் அமைச்சர்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago