2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

'சட்ட ஆலோசனை தகவல்களை சமூகத்துக்கு கொண்டுசெல்லவும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, குடியிருப்பு, காணி சொத்துக்கள் மற்றும் உரிமைகள் தொடர்பான சட்ட ஆலோசனையால் பெறப்படும் தகவல்களை ஏனைய மாணவர்களுக்கும் மற்றும் சமூகத்துக்கும் எடுத்துச் செல்வது உங்களின் கடமையாகும் என ஆணைக்குழுவின் மட்டக்களப்பு நிலைய இலவச சட்ட ஆலோசகர் திருமதி.சி.சசிரூபன் தெரிவித்தார்.

சமூகத்தில் பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவது பற்றி மாணவர்களுக்கிடையிலான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் சின்ன உப்போடை புனித திரேசா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.இதன்போதேத அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலவசமாக சட்ட உதவியை நாடும் மக்களுக்கு சட்ட ஆலோசனை, சட்ட உதவி, சட்டம் பற்றிய பயிற்சி, பிறப்பு,இறப்பு,விவாக, குடிசார் ஆவணங்கள் மற்றும் பிரஜா உரிமைச் சான்றிதழ்கள் பெறுவதற்காக உதவிகள் வழங்குவதே இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

சமூகத்தில் தற்போது அதிகரித்துக் காணப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு மாணவர்களாகிய நீங்கள் விழிப்பாக இருந்து உதவி தேவைப்படுவோருக்கு உங்களிடம் உள்ள அறிவைக் கொண்டு உதவி வேண்டியது மாணவர்களின் கடமையாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .