Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்
எதிர்வரும் பத்து மாதங்களுக்குள் கிழக்கு மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் 180 சதொச விற்பனை நிலையங்களைத் திறக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து சதொச விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தின் முதலாவது சதொச விற்பனை நிலையம் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்த காலத்தில் சதொச விற்பனை நிலையங்கள் பாரிய நட்டத்தில் இயங்கியிருந்தன. வருடாந்தம் சுமார் 15 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறு மாத காலத்தினுள் சதொச விற்பனை நிலையங்களை இலாபம் ஈட்டும் நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.

20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago