2025 மே 09, வெள்ளிக்கிழமை

'சந்தேகத்துக்கிடமானவர்கள் தொடர்பில் அறிவிக்கவும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இங்கு  சந்தேகத்துக்கிடமானவர்கள் நடமாடினால் அது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் காத்தான்குடி பொலிஸ் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

065-2246595 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க முடியுமென காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலமாக திங்கட்கிழமை (14) இரவு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் காத்தான்குடியிலுள்ள சில வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்களை கைதுசெய்வதற்கு  பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X