Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
சமூகத்தை முன்னேற்றுவதற்கான கடமைப் பொறுப்புக்கள் ஒவ்வொரு அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் உண்டு. சம்பளம் என்பது சமூகத்தை முன்னேற்றுவதற்காக மக்களுக்கு வழங்கும் சேவைகளுக்காக வழங்கப்படுகின்ற கூலியாகும் என மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட தொழிற்பயிற்சி வழங்குநர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு தலைமையேற்று நடத்தும்போதே, அவர் இதனைக் கூறினார்.
இக்கூட்டத்தில் களப்பயிற்சி மற்றும் மேலதிக பயிற்சிகள் உள்ளிட்டவைகளில் ஏற்படும் பிரச்சினைகள், அவற்றினைத் தீர்த்தல், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்பயிற்சிகளை வழங்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் எவ்வாறு உலகப்போட்டிக்கு ஏற்ப தொழில் வல்லுநர்களையும் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களையும் வழங்குவது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago