2025 மே 12, திங்கட்கிழமை

'சுகாதார சேவைக்குள் உளநலப்பிரிவு முறையாக உள்வாங்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சுகாதார சேவைக்குள் உளநலப் பிரிவு முறையாக உள்வாங்கப்படுவதற்கு சுகாதார அமைச்சு கொள்கைகளை வகுக்க வேண்டும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.எப்.அப்துல் றஹுமான் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, 'உளநலப் பிரிவின் தேவை என்பது தற்போதைய கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றது. போதைப்பொருள் பாவனை, குடும்பப் பிளவுகள், மற்றும் பல்வேறு மன அழுத்தங்கள் காரணமாக உள உடல் நலன் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

உளநல வைத்திய சேவைகளை வழங்குவதில் நாம் பல இடைஞ்சல்களுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்றோம்.
கடந்த காலங்களில் முறைசாரா முறையிலேயே நாங்கள் இந்த உளநலப் பணிகளை ஆற்றிக்கொண்டு வந்திருக்கின்றோம்.
உளநலப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற வைத்தியர்கள் சுகாதார அமைச்சின் சட்டமும் ஒழுங்கும் நியதிகளின்படி இடமாற்றத்திற்குட்படுகின்றபோது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு முடியாமற் போனால் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய உளநலப் பணிகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவேதான் இந்த உளநல வைத்தியப் பணி என்பதை சுகாதார அமைச்சின் முறைப்படியான கொள்கை வகுப்பினூடாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம். சமூக மட்டத்திலே உளநலப் பணியாற்றக் கூடியவர்களுக்கு முறைப்படியான கொள்கை வகுப்பின் மூலம் நியமனங்களை வழங்கி இந்த உளநலப் பணிகளை மேம்படுத்தி ஆரோக்கிய வாழ்வுக்கு வகுக்கலாம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X