2025 மே 12, திங்கட்கிழமை

'சுதந்திரமாக வாழும் சூழ்நிலையை இந்தியா ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 31 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் உரிமையைப் பெற்று சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலையை  இந்தியா ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 68ஆவது நினைவுதினம் காந்தி பூங்காவில் சனிக்கிழமை (30) மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மகாத்மா காந்தியின் வழியில் எமது நாட்டிலும் தமிழர்களின் உரிமைக்காக எமது தமிழ் அரசியல் தலைமைகள் அகிம்சை ரீதியில் போராடினார்கள். எனினும், அகிம்சைப் போராட்டம் தோல்வி அடையச் செய்யப்பட்டதன் காரணமாக ஆயுதப்போராட்டமாக மாற்றமடைந்தது. அதன் காரணமாக எமது மக்களுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டன.

எனவே, உலக்கு அகிம்சையை எடுத்துக்காட்டிய இந்தியா,  இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும்' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X