2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதன்  மூலம்  அவர்களின் முயற்சி வெற்றியளிக்கும் என மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினால் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு  பிரதேச செயலகப் பிரிவுகளில் பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின்  கீழ் மையிலம்பாவெளி கிராம அலுவலர் பிரிவில்  பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் தயாரிக்கும் தொழிலில்   ஈடுபட்டுள்ள இளையதம்பி குணதீபன்  இல்லத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள    இயந்திரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X