Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தொகுதியை அமைப்பதற்காக மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 850 மில்லியன் ரூபாய் நிதி திரும்பிச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கான இடப்பிரச்சினை காணப்படுகின்றது. இப்பிரிவுக்கான கட்டடத்தொகுதி;யானது, தற்போது வைத்தியசாலையில் மருந்தகத்தொகுதி அமைந்துள்ள இடத்தில் அமைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை, மருந்தகத்தொகுதிக்கான புதிய கட்டடத்தை அமைப்பதற்காக திராய்மடுப் பிரதேசத்தில் காணி; வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அக்காணியில் உடனடியாக மருந்தகத்தொகுதிக்கான புதிய கட்டடத்தை அமைக்கமுடியாத நிலைமை காணப்படுகின்றது.
அதுவரைக்கும் வேறொரு இடம் வேண்டும் என்பதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் விடுதிக் கட்டடத்தை மருந்தகத்தொகுதிக்கு வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், 'இது தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியிருந்தால், அதற்குரிய ஏற்பாட்டை மேற்கொண்டிருக்க முடியும். எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும். மேலும், சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டட வேலை விரைவில் ஆரம்பிக்கப்படும்' என்றார்.
இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் சீ.ரி. ஸ்கான் இயந்திரப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு மாவட்ட அபிவிருத்திக்குழு நடவடிக்கை எடுப்பதாக நேற்றைய தினம் திங்கட்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago