Thipaan / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் மறைமுகச் சக்திகள், நல்லாட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளைச் சீர்குலைக்க முயல்வதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இறக்காமம், மாணிக்கமடு பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ், முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழும் இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து, அவர்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயமாகும்” என அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது, மக்கள் பிரதிநிதிகளான அவர்களின் நேர்மை குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தமிழ், முஸ்லிம் மக்கள், அனைவருடனும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழவே விரும்புவதாகவும் தமது அரசியல் சுயலாபத்துக்காக அதனை சீர்குலைக்க விரும்பும் சிலரே, இவ்வாறான சதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் மறைமுகச் சக்திகளே, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நல்லாட்சி மீதான நம்பிக்கைகளைச் சீர் குலைக்க முயல்கின்றன” எனவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago