Niroshini / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
“சிறப்பான வளங்கள் பொருந்திய மட்டக்களப்பை உல்லாசப் பயணிகள் விருப்புடன் பயன்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையினை உருவாக்க வேண்டும். அதன் மூலம் மாவட்டத்தின் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முடியும்” என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று வியாழக்கிழமை (20) ஆரம்பமான சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலாத்துறை நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,
“மட்டக்களப்பு மாவட்டமானது கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளங்களைக் கொண்டிருக்கின்ற மாவட்டமாகும். இதனை 2 விடயங்களின் ஊடாகப் பயன்படுத்த நினைக்கின்றோம். இந்த வளங்களைப் பாதுகாப்பது. அதே நேரத்தில் இதனூடாக எப்படி இங்குள்ள மக்களது வாழ்வாதாரத்தினை உயர்த்துவது.
அந்த வகையில், சுற்றுலாத்துறை என்பது மாவட்டத்தின் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்தில் மட்டுப்படுத்தாது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருக்கின்ற வளங்களை ஒன்றாக இணைப்பதன் ஊடாக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு.
அந்த வகையில், சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக இந்த வருடத்தில் 100 மில்லியன் ரூபாய் செலவிலான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வழி இருக்கின்றது, வளம் இருக்கின்றது. அவற்றைச் சரியாகச் செய்து எல்லாவற்றையும் இணைத்து அவர்களுக்குச் சிறப்பான அனுபவத்தினைக் கொடுக்கின்ற வகையில் இருக்கிறோமா என்ற கேள்வி இருக்கிறது. அதனைச் சரியாகச் செய்து எல்லாவற்றையும் இணைத்து செயற்பட வேண்டும்” என்றார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago