Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிறுவர்களை ஆளுமையுள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமையாகும் என காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சிறுவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுவர் பிரிவு ஏற்பாடு செய்த இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்,
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் எந்தவொரு சிறுவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும்போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு மாநாட்டை கூட்டி அதனோடு தொடர்புடைய சகலரும் அழைக்கப்பட்டு அதற்கான தீர்வு முன் வைக்கப்படுகின்றது. இந்த ஒரு பொறிமுறை இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள், பெண்கள் தொடர்பான கட்டமைப்பு மிகவும் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி சார்ள்ஸ் இதற்கான சிறந்த வழிகாட்டலை செய்து சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.இதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
சமூகத்துக்கு மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை எடுத்துச் செல்ல வேண்டும்.ஒரு சமூகத்தின் அபிவிருத்தி என்பது வெறுமனே கட்டடங்களை கட்டுவது, பாதைகளை நிர்மாணிப்பது,பௌதீக வளங்களை தேடுவதல் ஆகியவற்றில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை.
மிக முக்கியமான அபிவிருத்தி மனிதவள அபிவிருத்தியாகும். மனிதர்களின் மனப்பாங்கு அவர்களின் அறிவு அவர்களின் திறன் என்பன விருத்தி செய்யப்படுகின்ற போதுதான் அப்பிரதேசம், அந்த நாடு முழுமையாக அபிவிருத்தி அடையும் நிலை ஏற்படும்.
சிறுவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். சிறுவர்களுக்கு முன்மாதிரியானவர்களாக நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். சிறுவர் சமூகத்தை ஆரோக்கியமான ஆளுமையுள்ள சமூகமாக மாற்ற வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
38 minute ago
57 minute ago