Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வரும் நிதி திரும்பிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளதாகவும் இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்காவிடின், அரசாங்கத்துக்கு எதிராக போராடவேண்டி ஏற்படுமென கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திராய்மடுப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நல்லாட்சியின் பயனாக 804 மில்லியன் ரூபாய் செலவில் மாவட்டச் செயலகக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கான நல்வரவாகும்;.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. மாவட்டத்தின் அபிவிருத்திக்காக கொண்டுவரப்பட்ட 9,000 மில்லியன் ரூபாய் நிதி திரும்பிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளது.
எமது மாவட்டத்தில் மண் அகழ்ந்து எமது தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி திரும்பிச்சென்றுவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்டோரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளதுடன், நாடாமன்றத்திலும் கலந்துரையாடியுள்ளேன். இல்லையென்றால், இம்மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தை இந்த அரசாங்கத்துக்;கு எதிராக மேற்கொள்ளவேண்டி ஏற்படுமென இவ்விடத்தில் கூறியாக வேண்டும்.
ஒப்பந்தகளை தனியான சங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு செயற்படமுடியாது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளனர். மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளார். அவர்களே அதனை எதிர்காலத்தில் முன்கொண்டு செல்லவேண்டும்.
எதிர்காலத்தில் அரச நிதிப்பிரமாணங்களின் அடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago