Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
பண்டைய கலை, கலாசாரங்களை முழுமையாக மறந்து நவீன உலகுக்கு ஏற்ற வகையில் நாம் மாறியுள்ளமையினால் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல காரணங்களினால் சூழல் மாசடைகின்றது.இருந்தபோதிலும் பசுமையான சூழலை பாதுகாக்க வேண்டிய அனைத்துப் பொறுப்புக்களும் எம்மைச் சார்ந்தாகும் என மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்த தேசிய மரநடுகை நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பெரியகல்லாறு, உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சிங்கப்பூர் போன்று இலங்கையினை ஒரு அழகிய நாடாக மாற்ற முடியும். அதற்கான அனைத்துச் செயற்பாடுகளும் இளைய தலைமுறையினரிடமிருந்து உருவாக வேண்டும்.
எமது நாட்டில் சுமார் முப்பது வருட காலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக மனித உயிர்கள் மாத்திரமல்லாது சூழலும் பாரியளவிலான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையினை காணக்கூடியதாகவுள்ளது.
வட பகுதியில் வீசப்பட்ட குண்டுகளினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையிலும் அதன் தாக்கம் காரணமாக தற்போது அங்கவீனமான குழந்தைகள் அதிகளவில் பிறப்பதற்கு வித்திட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகளிலிருந்து விடுபட்டு பசுமையான சூழலை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுபடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago