2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஓவியப்போட்டி

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 24 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.எல்.ரி.யுதாஜித்

எதிர்வரும் பெப்ரவரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தை  முன்னிட்டு ஓவியப்போட்டி நடத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள், திவிநெகும பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சகல கல்வி வலயங்களிலும் இப்போட்டியை நடத்தி ஒவ்வொரு வலயங்களிலும் முதல் 3 இடங்களைப் பெறும் ஓவியங்கள், மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

'மதுபோதையிலிருந்து விடுதலை பெற்ற சக வாழ்வுடன் கூடிய நாடு', 'பேண்தகு அபிவிருத்தியை நோக்கிய நாடு', 'பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்' எனும் கருப்பொருளைக் கொண்டதாக ஓவியங்கள் அமைய வேண்டும்.  இதில் முதல் 3  இடங்களைப் பெறும் போட்டியாளர்கள் முறையே 20,000 ரூபாய், 10,000 ரூபாய், 5,000 ரூபாய் பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வின்போது, வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு ஜனாதிபதியால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இதற்கான நிதி அனுசரணையானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இளைஞர் அபிவிருத்தி நல்லாட்சித் திட்டத்தின் ஊடாக வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X