2025 மே 08, வியாழக்கிழமை

'ஜேர்மன் வல்லுநர்கள் கிழக்கு மாகாணத்துக்கு உதவ முன்வந்துள்ளனர்'

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஜேர்மன் வல்லுநர்கள் கிழக்கு மாகாணத்துக்கு உதவ முன்வந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவின் பிரதி குழுத் தலைவர் வொல்ப்காங்க் ஹ்ருச்ஸ்கா மற்றும் டொக்டர் மைக்கல் டொஹ்மன்  தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

இக்கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வெருகலில் புதிய தொழில் பயிற்சி நிலையமொன்றை உடனடியாக அமைப்பதற்கும் உதவுவதாக உறுதியளித்துள்ளனர்.

அத்துடன் கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கும் உறுதியளித்துள்ளனர்.

மேலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி நிலையத்துக்கு கிழக்கு மாகாண இளைஞர்களை உள்வாங்கி அங்கு தொழில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் நூலகங்களையும்  பாடசாலைகளின் தகவல் தொழில்நுட்பப்பிரிவையும் அபிவிருத்தி செய்வதற்கு தம்மால் உதவிகள் வழங்க உத்தேசிப்பதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டாட்சியின் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் ஜேர்மன் நாட்டு தூதுக் குழுவினர் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X