Suganthini Ratnam / 2016 மே 08 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
வடக்கு, கிழக்குக்கு அப்பால் உள்ள தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட பெண் புலவர் ஒளவையாரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பண்பாட்டின் அடையாளங்கள் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. 30 வருட யுத்தத்திற்கு முன்பு மட்டுமல்ல 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது.
சோழர்கள் இந்த நாட்டை ஆண்டார்கள் என்பதன் வரலாற்று சான்று பொலன்னறுவை. அங்கிருந்த சோழர்களின் கட்டடங்கள், சிவாலயங்கள் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் காணாமல் செய்யப்பட்டும் வருகின்றன.
இந்த நாட்டின் பூர்வீக குடிகள் தமிழர்கள். வட, கிழக்கு என்பது தமிழர்களின் தாயக தேசம். இந்த தேசத்தில் வாழும் சிறுபான்மை மக்களை நேசிக்கும் மக்களாக பெரும்பான்மையின மக்கள் உள்ளனர். பெரும்பான்மையின மக்கள் இனவாதத்தினை விரும்பவில்லை.
இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசியல் தலைவர்களும் இந்த நாட்டில் உள்ள சில மதத் தலைவர்களுமே இனவாதத்தை கிளப்பி இந்த நாட்டினை சீரழிவுக்கு கொண்டு சென்றுள்ளனர். இனவாதத்தை தூண்டி மதவாதத்தை தூண்டி அரசியல ;நடத்தும் போக்கு இந்த நாட்டில் உள்ளது' என்றார்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago