2025 மே 07, புதன்கிழமை

'தமிழ் மாணவர்களை சட்டத்துறையில் உள்ளீர்க்க நடவடிக்கை'

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை கல்வியை பூர்த்திசெய்த தமிழ் மாணவர்களை சட்டத்துறையில் பயில்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இது தொடர்பில் ஆர்வமுள்ள மாணவர்களை தொடர்பு கொள்ளுமாறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் இளைஞர் யுவதிகளுக்கிடையில் சட்டத்துறை கல்வி தொடர்பான ஆர்வம்,புரிதல் என்பன மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளதாக கருதப்படுகின்றது.

தமிழ்த் தேசியத்துக்காக இளமையில் ஈர்க்கப்பட்டு கல்வியை துறந்தவன் என்ற அடிப்படையிலும் கல்விதொடர்பான ஆர்வம் கொண்டவன் என்றவகையிலும் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தினை உரமூட்ட சட்டக்கல்வியின் தேவையினை உணர்கின்றேன்.

அந்தவகையில். சட்டக்கல்வியை வழங்குவதற்கான வாய்ப்பினை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளேன்.

அந்தவகையில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் திறமைச்சித்தியும் உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியுமடைந்த இளைஞர், யுவதிகள் என்னுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சட்டக்கல்லூரிக்கு புகுதல் தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் துறைசார் நிபுணர்களினால் நடத்தவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் தெரிவுசெய்யப்படுபவர்களது பொருளாதார நிலைமையை கருத்தில்கொண்டு புலமைப்பரிசில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளேன்.

இந்த வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை கோருவதுடன் இன்றைய தமிழ் மக்களின் சூழலை புரிந்துகொண்டு சட்டத்துறையில் நுழைவதற்கு தமிழ் இளைஞர், யுவதிகள் முன்வரவேண்டும்.

இதனைத்தொடர்ந்து எதிர்காலத்தில் இலங்கை நிர்வாக சேவை,இலங்கை கல்வி நிர்வாக சேவை,இலங்கை கணக்காளர் சேவை,இலங்கை வெளிநாட்டு சேவை உட்பட உயர் பதவிகளுக்கான போட்டிப்பரீட்சைகளுக்கு தமிழ் மாணவர்களை தயார்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவுள்ளேன்.

இது தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதற்கு கோ.கருணாகரம்(ஜனா),இல.07,ஒலிவ்லேன்,மட்டக்களப்பு என்ற முகவரிக்கோ,077-6322335என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது janaa63Shoutlook.com என்ற மின்னஞ்சல் மூலமாகவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்புகொள்ளமுடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X