Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
தலைமை சொல்வதை மக்கள் கேட்க வேண்டும் என்ற நிலை மாறி மக்கள் சொல்வதை தலைமை கேட்க வேண்டும் என்கின்ற நிலைமை உருவாகி வருகின்றது என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியில் தீர்வுத் திட்டத்துக்கான முன்வரைபு ஞாயிற்றுக்கிழமை(31) மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்ட வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கும் வடக்கும் இந்த மண்டபத்திலே நாம் தற்போது ஒன்றாகக் கூடியிருக்கின்றோம். இந்ந நிலை தொடர வேண்டும் கிழக்கும் வடக்கும் இணைந்திருக்கின்ற சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வுதான் இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழி.
சட்டவாக்கங்களை தாங்களே உருவாக்கி தங்களைத் தாங்களே ஆளக்கூடிய கணிசமான அளவு அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வட,கிழக்கு மாகாணத்துக்கு வழங்குவதன் மூலம்தான் புரையோடிப் போயுள்ள தமிழர் பிரச்சினை தீரும்.
பிரச்சினை யாருக்கு உள்ளதோ அவர்களின் கருத்தை அறியாமல், அவர்களின் விருப்பை அறியாமல் பிரச்சினையை தீர்க்க முடியாது.
பிரச்சினை யாருக்கு உள்ளதோ அவர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் படிமுறைகளில் பங்களிப்பு செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.
அதனை விடுத்து மக்கள்மீது திணிக்கப்படுகின்ற எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி, எத்தகைய தீர்வாக இருந்தாலும் சரி அது ஒருபோதும் நிலையான நீடித்த பலனைத் தரப்போவதில்லை.
நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும், நாங்கள் தருவதைத்தான் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காலம் மலையேறிப் போக வேண்டும்.
உலகத்தில் மாற்றம் நடந்து கொண்டிருக்கின்றது. உலக மக்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தலைமை சொல்வதை மக்கள் கேட்கவேண்டும் என்ற நிலை மாறி மக்கள் சொல்வதை தலைமை கேட்க வேண்டும் என்கின்ற நிலமை உருவாகி வருகின்றது.
இதுவரை காலமும் நமக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் வெற்றியைத் தரவில்லை. அவை தோல்வியை மட்டுமல்ல பல்வேறுவிதமான நஷ்டங்களையும் தந்துள்ளன
அதனை உணர்ந்ததனால் தான் இன்று தமிழ் மக்கள் பேரவை நிபுணர் குழு ஒன்றின் உதவியோடு தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்ட முன்வரைபொன்றை தயாரித்துள்ளது. இது மக்களின் கலந்துரையாடலுக்கு விடப்படும். மக்களின் கருத்துக்கள் அறியப்படும். பின்னர் அது இறுதி வடிவத்தைப் பெற்று மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கின்ற தீர்வுத் திட்டமாக அது சம்பந்தப்பட்டோர் முன்னிலையில் வைக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago