Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
எமது கட்சியின் தலைவர், செயலாளர் வெகுவிரைவில் விடுதலையாகி வருவார்கள். அவர்களை வரவேற்க காத்திருக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபனின் 7ஆம் ஆண்டு நினைவு தின வைபவம் நேற்று சனிக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் அதன் மட்டக்களப்பிலுள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஜனநாயக வழியில் பயணிக்கின்ற மக்களுக்கான ஒரு கட்சியாகும். எமது கட்சி நேர்மையான பாதையில் செல்கின்றது. நேர்மையை விட்டு எமது கட்சி ஒரு போதும் விலகவில்லை.
கிழக்கு மாகாண மக்களுக்கென இக்கட்சி இருக்க வேண்டுமென்பதுதான் மறைந்த முன்னாள் தலைவர் ரகு அவர்களின் ஆசையாகும்.
இக்கட்சி கிழக்கு மாகாண மக்களுக்கான கட்சி மக்களுக்கு எதைச் செய்யலாம் என்ற எண்ணத்துடன் தான் இந்தக்கட்சியை நாம் வளர்த்துக் கொண்டு வருகின்றோம்.
இக்கட்சியின் தலைவர், செயலாளர் ஆகியோர் சிறையில் இருக்கின்றார்கள். இந்தக் கட்சிக்கு என்ன நடக்கும் என சிலர் நினைப்பார்கள். இதை நாம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாம் ஜனநாயகப் பாதையில் செல்லும் ஒரு கட்சிக்குரியவர்கள்.
மேலும்,நாங்கள் ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திக்கின்றோம். அவரது அலுவலகத்தில் அவரது இல்லத்தில் சந்திப்போம். தேவையென்றால் ஜனாதிபதியை சந்திப்போம் என்றார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தலைவர் கே.யோகவேள் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திராவியம், கட்சியின் பிரதி செயலாளாரும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயருமான ஏ.ஜோர்ஜ் பிள்ளை, கட்சியின் பொருளாளர் ஏ.தேவராஜன், அதன் கொள்ளை பரப்புச் செயலாளர் அஸாத் மௌலானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றப்பட்டதுடன் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago