Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தில் நிலவிவரும் தளபாடப்பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா உறுதியளித்துள்ளார்.
றகுமானியா பாடசாலைக்கு இன்று புதன்கிழமை(20), திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, அப்பாடசாலை அதிபர் எம்.பி.எம். சக்கூர் சகிதம் பாடசாலை சுற்றாடலையும் வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.
இதன்போது வலயக் கல்வி அலுவலகத்தின் சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்.ஜி.ஏ நாஸர் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் ஏ.சி.எம். சயீட் உள்ளிடோர் இணைந்துகொண்டனர்.
றகுமானியா மகா வித்தியாலயத்தில் 1,300 மாணவர்கள் உள்ளனர். இங்கு இடைநிலை வகுப்புக்களில் கற்கும் மாணவர்கள் சுமார் 400 பேருக்கான தளபாடங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு நேரடியாக விஜயம் செய்தார்.
இதன்போது, பாடசாலையின் குறைபாடுகள் குறித்த மகஜர் அதிபரினால் கையளிக்கப்பட்டது. தளபாடப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கான நிதி, இவ்வருடத்துக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியிலிருந்து வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago