Suganthini Ratnam / 2016 ஜூன் 01 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம், பேரின்பராஜா சபேஷ், வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூலாக்காடு கிராம அலுவலக அதிகாரியை தாக்கியதாகக் கூறப்படும் 3 இராணுவ வீரர்களை இன்று புதன்கிழமை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூலாக்காடு கிராம அலுவலக அதிகாரி இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வாழைச்சேனைப் பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிருக வேட்டையில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பூலாக்காடு மற்றும் முறுத்தானை கிராம அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை (30) இரவு சுற்றிவளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடத்தினர்.
இதன்போது, அக்கிறானைப் பகுதியில் முதிரைமரக் குற்றிகள் ஏற்றப்பட்ட வாகனம் ஒன்றைக் கண்டு அதை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவர்களிடம் மரங்களைக் கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை.
இது தொடர்பில் வனபரிபாலனத் திணைக்களத்திடம் அறிவித்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கூறியபோது, குறித்த வாகனத்திலிருந்த இராணுவத்தினரால் குறித்த கிராம அலுவலக அதிகாரி தாக்கப்பட்டு, வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பார்வையிட்டதுடன், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறிருக்க, இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நேற்றுப் புதன்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், கிராம அலுவலக அதிகாரிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago