2025 மே 10, சனிக்கிழமை

'த.தே.கூ உறுப்பினர்கள் சிலர் மாயவலையில் சிக்குண்டுள்ளனர்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சரின் மாய வலையில் சிக்கிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களுக்காக எந்தவொரு அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாத நிலையிலிருப்பதாக அம்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
 
அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 110 கைம்பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை, ஏறாவூர் நான்காம் வட்டாரப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் கல்வி தொடர்பான பிரச்சினையொன்றை கல்வி அமைச்சரிடம் பேசினால், அதனை முதலமைச்சரே கவனித்துக்கொள்வார் என்று கூறுகிறார்;.

முதலமைச்சரினால் தவறாக வழிநடத்தப்படும் கிழக்கு மாகாண சபையில் மிக விரைவில் நாங்கள் ஸ்திரமானதோர் எதிர்க்கட்சியை அமைத்து மக்களுக்குப் பயன் தரக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி  கிழக்கு மாகாண சபையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
 
இம்முறை வரவு -செலவுத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்துக்காக  மூவாயிரத்து ஐந்நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தனது தொழில் முயற்சியின் ஒரு சிறிய முதலீடு என்றும் முதலமைச்சர் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின், கிழக்கு மாகாணத்தில் சொந்த நிதியின் மூலம் ஒரு வீட்டை அல்லது ஒரு மலசலகூடத்தையேனும் முதலமைச்சர் கட்டிக்கொடுக்கவில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X