2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'த.தே.கூ. வை உடைக்க பலர் முயற்சி'

Suganthini Ratnam   / 2016 மே 02 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தி  உடைப்பதற்காக பலர் முயற்சித்து வருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இதுவே தமிழர்கள் தங்களின் உரிமைகளைப் பெற முடியாமல் போனமைக்கான வரலாற்றுத் தவறு. இதனை நாங்கள் உணர வேண்டும். இதனை உணராதவரை எமது உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

'எந்தப் போராட்டமும் ஓர் இரவில் முடிந்து விடுவதில்லை. எந்தப் போராட்டத்தாலும் ஓர் இரவில் எதனையும் பெற முடியாது. போராட்டம் என்பது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடு. அது நீண்ட பயணம். தொழிலாளர்கள் நீண்டகாலமாக தமது உரிமைகளுக்காக போராடியேவந்துள்ளனர்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை அரசாங்கம் என்றாலும் பெரும்பான்மை அரசியல் கட்சி என்றாலும் இந்த மே தின நிகழ்வில் தொழிலாளர்களின் உரிமை பற்றி பேசாமல் தமது கட்சி சார்ந்த ஆதரவைத் திரட்டும் வகையிலேயே நடத்தி வருகின்றது.

அனைத்து அரசியல் தலைமைகளும் தொழிற்சங்கங்களும் ஓரணியில் ஒன்றாக அணி திரள வேண்டும் என்பதே இந்த மேதினத்தில் விடுக்கும் அழைப்பாகும்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X