2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தூர, கஷ்டப் பிரதேசங்களில் அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் சேவையாற்ற வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 03 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தூரப் பிரதேசங்களிலும் கஷ்டப் பிரதேசங்களிலும் கல்வியை வளர்ப்பதற்காக ஆசிரியர்கள்  அர்ப்பணிப்புடன்  சேவை செய்ய வேண்டும் என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

பெண்கள் கஷ்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு துணிந்துசென்று சேவை செய்ய வேண்டும். நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் செல்லவேண்டும்.; இடமாற்றம் கோரி எவரும் கல்வி அமைச்சின் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அவர் கூறினார்.

கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சியைப் பூர்த்திசெய்த நிலையில், வெளிமாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு அவர்களின் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, 310 பேருக்கு கிழக்கு மாகாணத்தின் 03  மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 248 பெண்களும் 62 ஆண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரம், ஆன்மிகம் என்று  எந்த விடயமானாலும் அது வளர்ச்சி அடைவதற்குத் தேவையான கல்வி அறிவை ஊட்டுவதற்கான தேவை ஆசிரியர்களுக்கு உள்ளது. ஆசிரியர்கள் தங்களின்; கடமையை அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் செய்ய வேண்டும். அத்துடன், ஆசிரியர்களும் தங்களின்  ஆற்றலை மேன்மேலும் வளர்க்க வேண்டும்' என்றார்.   
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X