2025 மே 09, வெள்ளிக்கிழமை

'தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டையை பெற்றுவிடலாம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்திலுள்ள சகலரும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பாக தேசிய ஆள் அடையாள அட்டைகளைப் பெற்று விடுவர் என பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி  இன்று(21) தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

வாகரைப் பிரதேசத்தில் தற்போது சுமார் 13,135 பதியப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் வயதைத் தாண்டிய சுமார் 260 பேர் இன்னமும் தேசிய ஆள் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாமல் உள்ளார்கள்.

இவர்களுக்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாதமையே அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணமாகும்.

எனினும், இவர்களுக்கு உத்தேச பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

உத்தேச பிறப்புச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றதும் உடனடியாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் அடையாள அட்டை இல்லாமலுள்ள 260 பேரின் கைகளிலும் தேசிய ஆள் அடையாள அட்டை இருக்கும் என்று தான் நம்புவதாக அவர்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X