2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தீர்வுக்காக தமிழ்த் தலைமைத்துவங்கள் நிதானமாகச் செயற்படுகின்றன'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த் தலைமைத்துவங்கள் மிக நிதானமாகச் செயற்படுகின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்த நாட்டில் மூன்றாவது யாப்பு வரையப்படுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரசியலமைப்பு மாற்றத்தில் தாம் சிறந்த தீர்வுத் திட்டத்தை வேண்டி நிற்பதாகவும் அவர் கூறினார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, செங்கலடி அக்னி இசைக்குழுவின் ஏற்பாட்டில் செங்கலடிப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (24) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'இந்த நாட்டில் இனவாதத்தை விரும்பாத பெரும்பான்மையின மக்கள், சிறுபான்மையின மக்களுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர். இந்த ஆட்சியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
 
தீர்வுத்திட்டத்தை நோக்கிச் செல்லும்போது, குழப்புவதற்கு இனவாத மற்றும் மதவாத அமைப்புகள் மிகவும்; வேகமாகச் செயற்படுகின்றன. தற்போதைய சந்தர்ப்பத்தை மிக நிதானமாக கையாளவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்' என்றார்.
 
'மூன்று தசாப்தகாலமாக அழிக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட, காணாமல் செய்யப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள், தமிழர்களாகிய நாம்; தலைநிமிந்து வாழ வேண்டுமாயின்,  கல்வயின் மூலமாக எமது சமூகத்தை வளர்க்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X