Suganthini Ratnam / 2016 மே 05 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மத்திய அரசாங்கத்தால் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு வழங்கப்படும் 5,000 மில்லியன் ரூபாய் நிதி முறையான திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரைப் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில்; இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு மத்திய அரசாங்கத்தால் மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இந்த நிதியானது முமுமையாக கல்வி அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்' என்றார்.
'இந்த நிதி திரும்பிச் செல்லும் நிலையை ஏற்படுத்தாத வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
மேலும், கிழக்கு மாகாண சபையில் உயர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதில் முறைகேடுகள் இடம்பெறுகின்றதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இம்மாகாண சபையில் உள்ளூராட்சி ஆணையாளர், நிர்வாகச் செயலாளர்கள் மாற்றப்பட்டு வேறு நியமனங்கள் வழங்கப்பட்டன.
நிதிச் செயலாளர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய செயலாளர் நியமனத்துக்காக அடுத்த நிலையில் இருப்பவர் ஒரிரு மாதங்களில் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதால் அதற்கு அடுத்த நிலையில் இருப்பவரை நியமிப்பதற்கான நடவடிக்கையை பிரதம செயலாளரும் ஆளுநரும் எடுத்து வந்த நிலையில் கிழக்கு மாகாண அமைச்சரவை அவசரமாக ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளவருக்கு ஆறு மாதகால சேவை நீடிப்பு வழங்கியுள்ளது. இது எந்த அடிப்படையில் செய்யப்பட்டது? இதற்கு அனைத்து அமைச்சர்களும் ஆதரவு வழங்கியுள்ளமையானது கவலை தரும் விடயமாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago