2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'நீதியான விசாரணை வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 01 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன், வடிவேல் சக்திவேல்

 ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் உட்பட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்ட இறுதியில் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவிக்கையில், 'படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களினதும் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்குத் தேவையான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும்' என்றார்.

'கடந்த கால ஆட்சியின்போது, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகள் தொடர்பில் வலியுறுத்த முடியாத நிலைமை இருந்துவந்தது. ஆனால், தற்போது இந்த நிலை மாற்றம் அடைந்துள்ளதால், படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நாங்கள் கோரிக்கை விடுப்போம்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X