2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'நீதியான விசாரணை வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 'ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி  குறித்து மக்கள் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்தப்படுகின்றர்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

அண்மைக்காலமாக சில அரசாங்க அதிகாரிகள் செயற்படும் விதம் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமை  மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அவர்களுடன் உரையாடும்  போது புரிந்து கொள்ள முடிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னெடுக்கும் சிறந்த திட்டங்களை சீர்குலைப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் அரசாங்க அதிகாரிகளை பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான விடயங்கள் மூலம் ஏற்படுகின்றது.

எனவே, அரசாங்க அதிகாரிகள் பாரபட்சமின்றி தமது கடமைகளை மேற்கொள்வதுடன் சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X