Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என்ற இனங்களாக வாழ்கிறோம் என்பது இந்த நாட்டின் இலட்சணமாக இருக்க முடியாது. நாம் அனைவரும் இலங்கையர் என்பதே இலட்சணமாக இருக்க முடியும்' என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டுக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாங்கள் அறிவோம். நாம் இலங்கையர் என்பதை மறந்து இனங்கள் என்று கூறி ஒருவரையொருவர் அழித்திருக்கின்றோம். இந்த நாட்டின் சொத்துகளை யார் அழித்தார்கள்? அந்நிய நாட்டவரா வந்து அழித்தார்கள்? இலங்கையை ஆண்ட பிரித்தானியர் கூட இந்த நாட்டின் சொத்துகளை அழிக்கவில்லை. நாமே எமக்குள் பகைமை கொண்டாடி அழித்தோம். அழித்தவர்களெல்லாம் அந்நியர்கள் அல்ல, இலங்கையர்கள் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.
இனங்களுக்குள்ளே இனங்கள் என்று வட்டங்களைப் போட்டுக்கொண்டு இந்த நாட்டை அழித்திருக்கின்றோம்.
கூடியிருக்கின்றபோது எல்லோரும் ஒரு குலம் என்கின்றோம். ஆனால், தனித் தனியாகும்போது அங்கு இன பேதம், மத பேதம் என்று எகிறிக் குதிக்கின்றோம். இந்த நிலைமை மாற வேண்டும்.
இலங்கையராக நாம் எல்லோரும் இருந்திருந்தால்,;; இத்தனை அழிவுகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
மொழி உரிமை கேட்கப்பட்டபோது, குரல் வளையே நசுக்கப்பட்டிருக்கின்றது. ஆக இவையெல்லாம் மறைவதற்கான அடையாளங்கள் இப்பொழுது தெரிந்தாலும், சில பழைய அசைவுகளும் மீண்டும் எழுந்து நடக்க முனைப்புக் காட்டப்படுகின்றன' எனவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago