2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'நிரகரிப்பட்டவர்களால் மீண்டும் உரிமைகளை பெற்றுத்தர முடியாது'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால் மீண்டும் உரிமைகளைப் பெற்றுத்தர முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்களுடான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினாhர்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் 'இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் நம் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பல்வேறு முஸ்தீபுகள் நடைபெற்று வரும் வேளையில் முஸ்லிம்கள் எல்லோரும் சமூகம் என்ற ரீதியில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

நாட்டில் காணப்பட்ட யுத்த நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அரசியலமைப்பு மாற்றம் நடைபெற இருக்கும் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் தங்களுக்குரிய அரசியல் ரீதியான உரிமைகளை அரசியல் அதிகாரமே முக்கியமானதாகும். இன்று மத்தியிலும் மாகாணத்திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலம் பொருந்திய நிலையிலுள்ளது.

இன்று தேசியப்பட்டியல் கிடைக்காதவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். தமக்கான அதிகாரத்தை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்து முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களைச் செய்கின்றனர்' என்றார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X