2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

தற்போது நிலவுகின்ற வரட்சியான வானிலையைத் தொடர்ந்து குடிநீர் விநியோகத்துக்கான 1,000 லீற்றர் கொள்ளளவு உடைய 80 நீர்த்தாங்கிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் 06 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு புதன்கிழமை (05) மாலை வழங்கிவைக்கப்பட்டன.

ஏறாவூர்பற்று, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மத்தி, மண்முனை தென்மேற்கு, போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான நீர்த்தாங்கிகளை பிரதேச செயலாளர்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கையளித்தார்.

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில்  தேசிய அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிலைய அதிகாரிகளிடம் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய  அந்நிலையத்தால் நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டன.

தமது பிரதேசங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்த்துத்தருமாறு பொதுமக்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X