Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கரையோரப் பிரதேசங்களை பசுமை நிறைந்த பிரதேசங்களாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் கேட்டுக்கொண்டார்.
காத்தான்குடி கடற்கரையோரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மர நடுகை நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கரையோரப் பிரதேசங்களை பசுமை நிறைந்த பிரதேசங்களாக வைத்திருக்கும் திட்டத்தின் கீழ், இந்த மரநடுகை இடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு நாம் அனைவரும் பங்களிப்புச் செய்யவேண்டும்.
மரங்களை நடுவதன் மூலம் கடற்கரையோரத்தில் சிறந்த பசுமையான சூழலை ஏற்படுத்தமுடியும்' என்றார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவாராசா, கரையோரம் பேணல் கரையோரவள முகாமைத்துவத் திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் ஜி.மெக்கில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago