Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில் மிக நீண்டகாலமாக அதிபர்கள் இல்லாமல் இயங்கி வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிக்கு இன்று சனிக்கிழமை (25) அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலம் கூறப்பட்டுள்ளதாவது,
மட்.பட்.சின்னவத்தை அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.ஆணைகட்டியவெளி அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.பெரியகல்லாறு புனித அருளாந்தர் அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.களுதாவளை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை தரம் iii, மட்.பட்.வெள்ளிமலைப்பிள்ளையார்அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.மாலையர் கட்டு அ.த.க.பாடசாலை தரம் iii, மட்.பட்.மண்டூர் 39 அ.த.க.பாடசாலை தரம் iii,மட்.பட்.மண்டூர் 40 அ.த.க.பாடசாலை தரம் ii, மட்.பட்.காக்காச்சிவட்டை அ.த.க.பாடசாலை தரம் ii, மட்.பட்.மண்டூர் மகாவித்தியாலயம் பாடசாலை தரம் ii
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகள் நீண்டகாலமாக நிரந்தர அதிபர்களோ அல்லது கடைமை நிறைவேற்று அதிபர்களோ இல்லாமல் இயங்கி கொண்டிருக்கின்றன. எனவே, இப்பாடசாலைகளுக்கு கூடிய விரைவில் அதிபர்களை நியமனம் செய்து, இப்பாடசாலைகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025