2025 மே 09, வெள்ளிக்கிழமை

'பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன'

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இவ்வருடம் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.தேவஅதிரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஊடகவியலாயர் சம்மேளனத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (20) மட்டக்களப்பு கல்லடி வொய்ஸ் ஒவ் மீடியா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

றைட்ஸ் நௌவ் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஊடகவியலாளர்களின், பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்துள்ளதோடு, வயம்ப ஊடகசங்கத்தின் 25ஆவது ஆண்டு மாநாடு போன்றவற்றிலும் கலந்துகொண்டுள்ளோம்.

இதுபோல், எதிர்காலத்திலும் எமது ஊடகவியலாளர்களின் நலன்களிலும் ஊடகவியலாளர்களின் நன்மைகள் தொடர்பிலும் செயற்படவுள்ளோம். ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்பு வசதி மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றன வழங்கப்படும்.

எனவே, அனைத்து உறுப்பினர்களும் இச்சம்மேளனம் சிறப்புறச் செயற்படுவதற்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X