Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து பழுந்தடைந்த பாண் துண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து, இன்று வியாழக்கிழமை குறித்த வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, அவ்வீட்டில் சுமார் ஆயிரம் கிலோகிராம் வரையில் பழுந்தடைந்த பாண் துண்டுகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் குறித்த அதிகாரிகள் கூறினர்.
இப்பாண் துண்டுகளை இயந்திரத்தில் அரைத்து பேக்கரியொன்றுக்கு வழங்கி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பாண்துண்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை வைத்திருந்த குறித்த வீட்டு உரிமையாளரை எச்சரித்துள்ளதுடன், இவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago