Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
தமிழ் சமூகங்களில் இன்று பெண்கள் எதிர்கொண்டுவரும் வன்முறைகளுக்கும் துஸ்பிரயோகங்களுக்கும் எதிராக முறைப்பாடுகளைச் செய்யவோ, நீதி பெறுவதற்கோ துணிவற்றவர்களாகவும் தமது குடும்பத்தை முன்னேற்ற வேண்டுமென்ற ஒரே எண்ணத்தோடு தமக்கெதிராக நிகழும் கொடுமைகளை தாங்கிக்கொள்பவர்களாகவும் பெண்கள் பழகிக்கொண்டுள்ளனர் என சட்டத்தரணி கலைவாசனா துஸ்யந்தன் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு பாதிக்கப்படுகின்றவர்களுக்கு, இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டு வரும் இலவச சட்ட உதவிகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் தேசிய வேலைத்திட்டங்களுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (09) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இங்கு மனித உரிமைகள் இல்ல சட்டத்தரணி திருமதி. நிதர்சினி விஜிதன் கூறுகையில்,
எமது சமுகங்களில் வாழும் பெண்கள் தமது அடிப்படை உரிமைகளைக்கூட அறிந்திராதநிலையில் உள்ளதாகவும், தங்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படும்போது அவற்றை அன்றாட வாழ்க்கையின் ஒரு சம்பவமாக மட்டும் எண்ணிக்கொண்டு தம்மைத்தாமே தேற்றிக்கொள்ளும் மனநிலையோடு வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு மனித உரிமைகள் இல்லம் முன்னெடுத்துவரும் சட்ட உதவிகள் குறித்தும் அவர் அங்கு தெளிவுபடுத்தினார்.


5 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago