2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆடைகள்

Niroshini   / 2016 மே 24 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான மனித சேவைகள் நிறுவனத்தினால் இயற்கை அனர்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்விக்கு உதவும் முகமாக சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதன் தலைவர் கே. அப்துல் வாஜித் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

மேற்படி சிறுவர் ஆடைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் ஷெட் நிறுவன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா ஷெட் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித், பணிப்பாளர் சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியுமான ஏ.டபிள்யூ.எம் பவுஸ், நிருவாகக் குழுவைச் சேர்ந்த எம்.எல்.பெரோஸ், ஏ.எம்.எம்.நஸுர்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் தற்போதைய சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள இயற்கை இடரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவும் நோக்குடன் இந்த ஆடைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X