2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புத்தகக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, மாவட்ட பொது நூலகத்தில் எதிர்வரும் 31ஆம் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசமென்பதுடன், நூல்களின் விற்பனையும் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் நூல்கள் மாநகர சபையினால் கோரப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் நூல்கள் கண்காட்சி முடிவில் திருப்பி ஒப்படைக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நூல்களை வழங்க விரும்;புவோர் மட்டக்களப்பு பொதுநூலகத்தில் 30ஆம் திகதிக்கு முன்னராக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .